சினிமா

பிக் பாஸ் 10: விஜய் சேதுபதிக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் ஏன்? பின்னணி இதோ!

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி 7 வாரங்களை நிறைவு செய்து 50-வது நாளை எட்டியுள்ளது. வழக்கமாக வார இறுதி நாட்களில் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நிலையில், இந்த வாரம் அவருக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுப்பாளராக களம் இறங்கியுள்ளது ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கான காரணத்தை ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியின் போதே விவரித்தார். கடந்த இரண்டு வாரங்களாகவே விஜய் சேதுபதி கடுமையான தொண்டை வலி மற்றும் உடல்நல பிரச்சனைகளுடன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். போட்டியாளர்கள் கேட்கப்படும் கேள்விகளுக்கு நேரிடையாக பதிலளிக்காமல் சுற்றி வளைத்து பேசியதால், அவர்களிடம் பேசி பேசி விஜய் சேதுபதியின் குரல் வளம் மிகவும் பாதிக்கப்பட்டது.

இதன் காரணமாக மருத்துவர்கள் அவருக்கு கட்டாய ஓய்வு எடுக் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் விஜய் சேதுபதியின் குரலாகவும், மக்களின் குரலாகவும் பிக் பாஸ் மேடையில் ஒலிக்க தான் வந்துள்ளதாக ரம்யா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்த மாற்றம் தற்காலிகமானது மட்டுமே என்றும், அடுத்த வாரம் உடல்நிலை தேறி விஜய் சேதுபதியே மீண்டும் பிக் பாஸ் தொகுப்பாளராக திரும்புவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்