ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் திரைப்படம் சீன். இந்த படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற நவம்பர் 6ம் தேதி வெளியாகவுள்ளது. சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் டீசர் வீடியோவும் வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
சூர்யாவின் கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படங்கள் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் அடுத்து சீன் திரைப்படம் வெளியாகவிருக்கிறது. பஹத் பாசிலை வைத்து ஆவேசம் படத்தை இயக்கி ஜித்து மாதவன் படம் என்பதால் எதிர்பார்ப்பும் மேலும் அதிகரித்திருக்கிறது.
இந்நிலையில், இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு காட்சியை கிளிம்ப்ஸ் வீடியோவாக படக்குழு வெளியிட்டிருக்கிறது. Glimpse of DSP Inbaraj என கேப்ஷன் கொடுத்திருக்கிறார்கள்.

