இந்தியாவிலுள்ள முக்கிய நிறுவனத்தில் பிரிட்டானியாவும் ஒன்று. பல வருடங்களுக்கும் மேல் இந்த நிறுவனம் பல உணவு பொருட்களையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில்தான், கோதுமை பிரட்டில் தவறான தகவலை தெரிவித்து நடவடிக்கையில் சிக்கியிருக்கிறது.
100 சதவீத முழு கோதுமை பிரட் எனக்கூறி விளம்பரம் செய்த பிரிட்டானியா நிறுவனத்திற்கு ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. நுகர்வோரை தவறாக வழிநடத்தும் வகையில் விளம்பரம் செய்ததாக கூறி மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
பிரிட்டானியா நிறுவன பிரெட்களில் 62 சதவீதம் மட்டுமே முழு கோதுமை மாவு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதால், தவறான விளம்பரத்தை திரும்ப பெறவும், 15 நாட்களுக்குள் அறிக்கையை சமர்ப்பிக்கவும் பிரிட்டானியா நிறுவனத்திற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

