பஹல கடுகன்னாவ பகுதியில் ஏற்பட்ட மணிசரிவில் இடிபாடுகளில் சிக்கியிருந்த ஆணொருவர் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டநிலையில் அங்கு அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி உயிரிழப்பின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்த பெண் ஒருவர் சுமார் 5 மணித்தியாலங்கள் பின்னர் மீட்கப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்ட பெண் மாவனெல்லை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, தற்போது வைத்தியசாலையில் 5 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் மொத்தம் இருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Rt. Rev. Dr. Paulraj Rajapandian DD
November 23, 2025Very good idea and plan but still need further development with more articles and pages