தென்னிந்திய திரையுலகின் நட்சத்திர ஜோடிகளான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா, இத்தாலி நாட்டின் ரோமில் புத்தாண்டு விடுமுறையை கொண்டாடி வரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ராஷ்மிகா தனது ரோம் பயண படங்களைப் பகிர்ந்த சில நாட்களிலேயே, விஜய் தேவரகொண்டாவும் அதே நகரில் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதில் இருந்து புத்தாண்டு விடுமுறையை இவர்கள் இருவரும் ஒன்றாகவே கழிக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.
தகவல்களின்படி, இந்த ஜோடிக்கு கடந்த 2025 அக்டோபர் மாதம் குடும்பத்தினர் முன்னிலையில் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துவிட்டது. தற்போது இவர்களின் திருமணம் 2026, பிப்ரவரி 26 அன்று ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள ஒரு பாரம்பரிய அரண்மனையில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தத் திருமண நிகழ்வு மிகவும் தனிப்பட்ட முறையில், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் மட்டுமே நடைபெறும் என்றும், சினிமா பிரபலங்களுக்கு அழைப்பு இருக்காது என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

