ஈரான் நாட்டின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் செய்தித் தொடர்பாளர் அலி முகமது நைனி, அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஈரான் அரசு ஊடகம் அறிவித்துள்ளது.
ஈரானின் ஏவுகணை தொழில் தடையின்றி இயங்குவதாக அவர் பெருமையுடன் பேசிய சில மணி நேரங்களிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரே வாரத்தில் ஈரான் அரசாங்கம் மற்றும் ராணுவ தலைமையின் மீது நடத்தப்பட்ட நான்காவது பெரிய தாக்குதல் இதுவாகும்.
ஏற்கனவே அலி லாரிஜானி, கோலம்ரேசா சுலைமானி மற்றும் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் காதிப் ஆகியோர் கொல்லப்பட்ட நிலையில், நைனியின் மரணம் ஈரானுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் காவல்படை சூளுரைத்துள்ளது.

