ஐபிஎல் 2026 சீசன் தொடங்குவதற்கு முன்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஒரு உற்சாகமான செய்தி கிடைத்துள்ளது. இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பத்திரனா காயத்திலிருந்து மீண்டு, விளையாட தயார் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது.
டி20 உலகக்கோப்பையின் போது ஏற்பட்ட தசைநார் காயத்தால் அவதிப்பட்டு வந்த அவருக்கு, தற்போது ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஏலத்தில் 18 கோடி ரூபாய்க்கு கேகேஆர் அணியால் வாங்கப்பட்ட பத்திரனா, அந்த அணியின் வேகப்பந்து வீச்சு பலத்தை அதிகரிக்க முக்கிய வீரராக கருதப்படுகிறார்.
ஏற்கனவே ஹர்ஷித் ராணா காயம் காரணமாக விலகியுள்ள நிலையில், பத்திரனாவின் வருகை அணிக்கு பெரும் பலம் சேர்க்கும். மார்ச் 25-ம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டிக்காக கேகேஆர் அணி மும்பை செல்ல உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தனது திறமையை நிரூபித்த பத்திரனா, இந்த சீசனில் கேகேஆர் அணிக்காக எந்த அளவுக்கு சிறப்பாக செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

