போடா போடி திரைப்படம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதன்பின் சில வருடங்கள் கழித்து தனுஷ் தயாரிப்பில் நானும் ரவுடிதான் என்கிற படத்தை இயக்கினார்.. இந்த படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாராவும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனதால் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்தது.
அதேநேரம் அதன்பின் விக்னேஷ் சிவன் இயக்கிய சில படங்கள் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடிக்கவில்லை.. ஒருபக்கம் நானும் ரவுடிதான்படத்தை உருவாக்கிய போது அந்த படத்தில் நடித்த நயன்தாராவுடன் விக்னேஷுக்கு காதல் ஏற்பட்டு இருவரும் திருமணமும் செய்து கொண்டனர்.. மேலும், வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகளுக்கும் இருவரும் பெற்றோர்களாக மாறிவிட்டனர்.
அதேநேரம், இயக்குனராக இருந்தலும் நயன்தாராவின் கணவர் என்பதுதான் விக்னேஷ் சிவனின் அடையாளமாக இருக்கிறது என சில சினிமா பத்திரிக்கையாளர்கள் தொடர்ந்து பேசி வருகிறார்கள். இதற்கு பதிலடி கொடுத்துள்ள விக்னேஷ் சிவன் ‘என்னை பார்க்கும் பலரும் முதலில் நயன்தாரா என்றுதான் அடையாளப்படுத்துகிறார்கள். நம் பிள்ளைகள் பெயரை கூறி நம்மை அடையாளப்படுத்தினால் நாம் சந்தோஷப்படுவோம்.. அதுபோல மனைவியின் பெயரை சொல்லி என்னை கூப்பிடுவதை பெருமையாகவே பார்க்கிறேன்.. இதில் ஏன் பாகுபாடு பார்க்கணும்?’ என கேள்வி எழுப்பியிருக்கிறார் விக்னேஷ் சிவன்.

