இந்தியா

திமுகவுக்கு ஓட்டுபோட்டாதான் ரூ.8 ஆயிரம் டோக்கன்!.. ஆதரத்தை வெளியிட்ட இயக்குனர்

தமிழகத்தில் வருகிற 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது.. 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று முக ஸ்டாலின் முதல்வராக அமர்ந்தார். எனவே இம்முறையும் திமுக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் திமுக செயல் பட்டு வருகிறது.

ஒருபக்கம் 2021-ல் விட்டதை 2026-; பிடித்து விட வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமியும் காய்களை நகர்த்தி வருகிறார். கடந்த பல நாட்களாகவே அவர் தமிழகமெங்கும் பல தொகுதிகளிலும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். ஒருபக்கம் புதிய அரசியல் சக்தியாக விஜயின் களமிறங்கியிருக்கிறார்.. எனவே இந்த தேர்தல் மக்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது..

ஒருபக்கம் வழக்கம் போல் அரசியல் கட்சிகள் மக்களிடம் வாக்குகளை வாங்க பணம் கொடுப்பது, பரிசுப் பொருட்களை கொடுப்பது, கூப்பன் கொடுப்பது, டோக்கன் கொடுப்பது போன்ற வேலைகளை துவங்கி விட்டன. குறிப்பாக ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக பல இடங்களிலும் பணம், டோக்கன் அதிமுகவின் புகார் சொல்கிறார்கள்.

அதிலும், 8 ஆயிரம் மதிப்புள்ள டோக்கனை இப்போதே கொடுத்துவிட்டு திமுகவுக்கு நீங்கள் வாக்களித்து வெற்றி பெற்றால் இந்த டோக்கன் செல்லும் என்று பல பகுதிகளில் திமுகவினர் பல வீடுகளிலும் கொடுப்பதாக அதிமுகவினர் புகார் சொல்கிறார்கள்.. சமீபத்தில் கூட ஈரோட்டில் திமுகவினர் இந்த 8 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள டோக்கனை கொடுப்பதாக சொன்னார்கள். அதிமுகவினர் சென்றதும் டோக்கனை கீழே போட்டுவிட்டு திமுகவினர் சென்றதாக சொல்லி அது தொடர்பான வீடியோவும் வெளியானது.

இந்நிலையில், தமிழ் திரைப்பட இயக்குனர் மோகன்.ஜி தனது எக்ஸ் தளத்தில் ‘ராயபுரம் தொகுதியில் உள்ள என் வீட்டுக்கு நாலு பெண்கள் வந்தார்கள்.. எங்கள் வாசலில் மொத்தம் 5 குடும்பங்கள். 5 வீட்டிலும் ரேசன் கார்டை வாங்கி அடை அவர்களின் செல்போனில் போட்டோ எடுத்துக் கொண்டு ஒரு ரேசன் கார்டுக்கு 8000 ரூபாய் கூப்பன் கொடுத்தார்கள். குடும்ப தலைவியிடம்தான் தருவேன் என அடம் வேறு.. கடைசியாக திமுகவிற்கு ஓட்டு போட்டு நாங்கள் ஜெயித்தால் மட்டுமே இது செல்லும், வெற்றி பெற்ற மறு நாளே இதை பயன்படுத்தி கொள்ளலாம், 8 ஆயிரம் வேண்டுமென்றால் ஓட்டு போடுங்கள், இந்த கூப்பன் பத்திரம்’ என சொல்லிவிட்டு கிளம்பினார்கள்.. இந்த காலத்திலே இப்படி என்றால் என் தாத்தா காலத்தில் எப்படி பேசி ஓட்டு வாங்கியிருப்பார்கள் இந்த விஞ்ஞானிகள்’ என பதிவிட்டிருக்கிறார்.

ஆனால், இதை திமுகவினர் மறுக்கிறார்கள். இது உண்மையென்றால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். மோகன் இயக்குனர் என்பதால் கதை சொல்கிறார் என பதிவிட்டு வருகிறார்கள்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்