சினிமா

பேச்சுவார்த்தை ஓவர்!.. விரைவில் வெளியாகும் ஜனநாயகன்!.. விஜய் ஃபேன்ஸ் ஹேப்பி!

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து விட்டநிலையில் அவர் நடித்த ஜனநாயகன் திரைப்படம் அவரின் கடைசி படமாக பார்க்கப்படுகிறது. ஜனநாயகன் எனது கடைசி திரைப்படம் என விஜய் ஏற்கனவே அறிவித்துவிட்டார். ஆனால் அப்படி அறிவித்த அவரின் ஜனநாயகன். தற்போது வரை தியேட்டரில் வெளியாகவில்லை. கடந்த ஜனவரி 9ம் தேதி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படம் வெளியாகவில்லை.

ஆனால் அப்படி அறிவித்த அவரின் ஜனநாயகன். தற்போது வரை தியேட்டரில் வெளியாகவில்லை. கடந்த ஜனவரி 9ம் தேதி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படம் வெளியாகவில்லை. தற்போது படம் மறுத்தணிக்கையில் இருக்கிறது.. ஆனால் எப்போது தணிக்கை அதிகாரிகள் சான்றிதழ் கொடுப்பார்கள் என்பது தெரியவில்லை.. படத்தில் அரசியல் தொடர்பான காட்சிகள் இருப்பதால் தேர்தல் அதிகாரிகள் படத்தை பார்க்க வேண்டும் என அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

ஒருபக்கம் சில நாட்களுக்கு முன்பு ஜனநாயகன் முழு படமும் இணையத்தில் கசிந்தது.. சில இணையதளங்களில் படம் முழுவதுமாக வெளியானது. பலரும் டவுன்லோட் செய்து இந்த படத்தை பார்த்துவிட்டனர். இது தயாரிப்பாளருக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது.

இந்நிலையில்தான், படத்தை விரைவாக தியேட்டரில் வெளியிடும் முயற்சியில் படத்தின் தயாரிப்பாளர் இறங்கியிருக்கிறார்.. நேற்று விநியோகஸ்தர்களிடம் பேச்சுவார்த்தை நடந்தது.. அப்போது படத்தை தியேட்டரில் வெளியிட நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்கிறோம் என விநியோகஸ்தர்கள் கூறிவிட்டனர். இதையடுத்து இன்று ஓடிடி நிறுவனத்திடம் தயாரிப்பாளர் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.. அதிலும் உடன்பாடு ஏற்பட்டால் வருகிற 24 அல்லது 25ஆம் தேதி ஜனநாயகன் தியேட்டரில் வெளியாகும் என்கிறார்கள்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்