தன்னை நடிப்பு அரக்கன் என சொல்லிக்கொண்டு இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு பலரையும் அலற வைத்து வருபவர் திவாகர். அடிப்படையில் இவர் ஒரு பிசியோதெரபி மருத்துவர். ஆனால், சிவாஜி போல நடிப்பேன் என சொல்லி இவர் வீடியோக்களை வெளியிட்டதால் பலரும் இவரை ட்ரோல் செய்தனர். அதோடு, தன்னை வாட்டர்மெலன் ஸ்டார் என தனக்குத்தானே பட்டம் வைத்துக்கொண்டார் திவாகர்.
நெகட்டிவ் பப்ளிசிட்டி இவரை பிரபலமாக்கிவிடவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அங்கும் சரியாக விளையாடாமல் வெளியேறினார். சில படங்களில் சில காட்சிகளிலும் நடித்தார். இந்நிலையில்தான் சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார்.. ஆனால், கானா பாலா, புகழ், மா.கா.பா ஆனந்த் ஆகியோர் தன்னை தாக்கியதாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும், செய்தியாளர்களிடம் பேசியபோது ‘மா.கா. பா ஆனந்த் குடிபோதையில் இருந்தார்.. அவர் குடித்துவிட்டு தான் செட்டுக்கு வருகிறார்.. அவர் இரும்பு கம்பியால் என் காலில் அடித்தார். என் வளர்ச்சியை பார்த்து அவர்களுக்கு பொறாமை’ என்றெல்லாம் சொன்னார்.
ஆனால் திவாகரின் புகாரை மா.கா.பா ஆனந்த், புகழ், பாலா ஆகியோர் மறுத்துள்ளனர். திவாகர அளித்த புகார் தொடர்பாக காவல் நிலையத்திற்கு வந்த அவர்கள் செய்தியாளர்களிம் பேசிய போது ‘திவாகர் அடிப்படையில் மிகவும் மோசமான மனிதர்.. பெண்களிடம் மரியாதையாக பேச மாட்டார்.. மிகவும் இழிவாக நடந்து கொள்வார்.. ஏற்கனவே ஒருமுறை விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.. அவர் மீது புகார் வந்ததால் அவரை நீக்கிவிட்டனர். அதற்கு நான்தான் காரணம் என அவர் நினைத்துக்கொண்டார்.
தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவருக்கு வாய்ப்பு கொடுத்தோம். ஆனால் ஒரு சீரியல் நடிகையிடம் அவரின் கணவரின் முன்பே ‘நீ இவ்வளவு நாட்கள் இவருடன் இருந்து விட்டாய்.. ஒருநாள் என் கூட இரு’ என்று சொல்கிறார்.. இது காமெடியா?.. இப்படி பேசுபவர் எப்படி ஒரு நல்ல மனிதராக இருக்க முடியும்? அவர் வெளியே சொன்னது எல்லாமே பொய்.. நான் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் நின்று கொண்டிருக்கிறேன்.. குடித்துவிட்டு போனால் வேலை செய்ய முடியுமா?.. அவரை நம்ப வேண்டாம்.. அவரை ஊடகங்கள் தவிர்ப்பது நல்லது.. அவரை பேட்டி எடுக்காதீர்கள்’ என்று ஆவேசமாக பேசினார்.
மேலும் புகழ் பேசிய போது ‘நல்ல திறமை கொண்ட, மக்களை மகிழ்விக்கிற, மக்களை சிரிக்கவைக்கும் பலரும் இருக்கிறார்கள்.. அவர்களுக்கெல்லாம் வாய்ப்பு கொடுங்கள்.. அவர்களை பேட்டி எடுங்கள்.. திவாகர் போன்ற திறமை இல்லாத, பொய்யை பேசுகிற, தன்னைத்தானே புரமோட் செய்து கொள்கிற ஒருவரை நம்பாதீர்கள்.. அவரைப் பேட்டி எடுக்காதீர்கள்’ என்று பேசினார்.

