இந்தியா

செங்கோட்டையன் ஒழுங்கா பேசு!. ரகசியத்தை டிவில போட்ருவேன்!.. மிரட்டிய பழனிச்சாமி..

அதிமுகவில் பல வருடங்கள் எம்எல்ஏவாகவும் அமைச்சராகவும் இருந்தவர் செங்கோட்டையன்.. அதிமுகவிலிருந்து நிக்கப்பட்டவர்களை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்ததால் அவரை அதிமுகவின் அடிப்படையில் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கினார் பழனிச்சாமி. ஓ.பி.எஸ், டிடிவி தினகரன், சசிக்கலா ஆகியோருக்கு நெருக்கமாக இருந்ததால்தான் அவரை பழனிசாமி கட்சியிலிருந்து நீக்கியதாக சொல்லப்பட்டது. அதன்பின் விஜயின் தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்.

தற்போது தேர்தல் பிரச்சாரங்களில் பழனிச்சாமி பற்றி கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார் செங்கோட்டையன். இரண்டு நாட்களுக்கு முன்பு பிரச்சாரத்தில் பேசிய செங்கோட்டையன் ‘துரோகத்தின் மொத்த உருவம் எடப்பாடி பழனிச்சாமி.. அவர் மனிதநேயமற்றவர். அவரை பொதுச்செயலாளர் ஆக்கியது என் தவறு.. சசிகலாவை ஒதுக்கி துரோகி பட்டம் கொடுத்தார்.

அவர் சிறையில் இருந்து விடுதலை ஆனபோது அவருக்கு எந்த உதவியும் செய்யக்கூடாது என்று கட்சியினருக்கு உத்தரவு போட்டார்.. சசிகலா 15 நாளில் பரோலில் வந்த போது கூட அதிமுகவினர் அவரை பார்க்க அனுமதிக்கவில்லை.. எடப்பாடி பழனிச்சாமிக்கு பாஜக அவ்வளவு உதவிகள் செய்தும் 2024ம் வருடம் தனித்து நின்றார்.. தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட் கொடுப்பதாக சொல்லி ஏமாற்றினார்.. இப்படி பழனிச்சாமி செய்த துரோகிகங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்’ என்று பேசியிருந்தார்.

இன்று பிரச்சாரத்தில் பேசிய பழனிச்சாமி செங்கோட்டையனை பற்றி கடுமையாக விமர்சித்து பேசினார். இனிமேல் செங்கோட்டையனுக்கு மரியாதை கிடையாது.. நீ ஒழுங்கா பேசுனா நானும் உனக்கு மரியாதை கொடுத்து பேசுவேன்.. உன்ன பத்தி பல ரகசியம் என்னிடம் இருக்கு.. நீ பண்ண எல்லாம் எனக்கு தெரியும்.. டிவில போட்டு விட்டுருவேன்.. நீ ஈரோடு தொகுதில தலை காட்ட முடியாது.. அரசியல்ரீதியா பேசினா நானும் பேசுவேன்’ என்று அதிரடியாக பேசியிருக்கிறார் பழனிச்சாமி.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்