ஈரான் அணு ஆயுதம் உற்பத்தி செய்யக் கூடாது எனக்கூறி இஸ்ரேலும், அமெரிக்காவும் அந்த நாட்டின் மீது தொடங்கிய போர் ஒரு மாதத்திற்கு மேல் நடைபெற்று வந்தது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார். இதனால் கோபமடைந்த ஈரான் வளைகுடா நாடுகளிலிருந்து எண்ணெய் கப்பல்கள் செல்லும் கடல் வழி பாதையான ஹார்முஸ் நீரிணையை மூடிவிட்டது. இதனால் இந்தியாவிலுள்ள பல நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் வராமல் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது.. பல மாநிலங்களிலும் ஹோட்டல்கள் மூடப்பட்டது.
இது அமெரிக்காவுக்கு நெருக்கடி கொடுக்கவே ஈரான் ஹார்முஸ் நீரிணையை திறக்காவிட்டால் அந்த நாட்டின் முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்தார். ஆனாலும் ஈரான் அடிபணியவில்லை. அதோடு, திருப்பி தாக்கவும் துவங்கியது. அமெரிக்காவின் அதிக விலை மதிப்பு கொண்டு பல விமானங்களை ஈரான் சுட்டு வீழ்த்தியது. ஒருவழியாக, சமீபத்தில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு இரண்டு வருடம் போர் நிறுத்தம் என முடிவு செய்யப்பட்டது.. இதையடுத்து நேற்று ஹார்மூஸ் நீரிணையை ஈரான் திறந்து வைத்தது. இதை அமெரிக்காவும் வரவேற்றது.
ஆனால், ஈரானிய துறைமுகங்கள் மற்றும் கடற்கரை பகுதிகளை முற்றுகையிடும் வகையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மற்றும் போர் விமானங்களுடன் USS ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கிக் கப்பலை அனுப்பியிருக்கிறது அமெரிக்கா.
இது ஈரானுக்கு கோபத்தை ஏற்படுத்தவே ஹார்மூஸ் நீரிணையை மீண்டும் தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவதாக ஈரான் ராணுவம் அறிவித்திருக்கிறது. அமெரிக்கா தனது முற்றுகை நடவடிக்கை கைவிடும் வரை ஹார்மூஸ் மூடப்பட்டிருக்கும் எனவும் ஈரான் தெரிவித்துவிட்டது. இப்படி எல்லா வகையிலும் அமெரிக்காவுக்கு ஈரான் டஃப் கொடுத்த வருவது குறிப்பிடத்தக்கது.

