நடிகர் அஜித்குமாரை பொறுத்தவரை தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் போது ஒவ்வொரு முறையும் தவறாமல் வந்து வாக்களிக்கிறார். அந்த வகையில் தமிழகத்தில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் பெல்ஜியல் நாட்டில் கார் ரேஸில் ஈடுபட்டிருந்த அஜித் விமானம் மூலம் சென்னை வந்தார்.
அதன்பின், இன்று காலை 6.45 மணியளவில் திருவான்மியூருக்கு வாக்களிப்பதற்காக வந்தார்.
அப்படி அவர் வந்த போது வெள்ளை நிற கோட் சூட், மற்றும் கருப்பு நிற கண்ணாடி அணிந்து மிகவும் ஸ்டைலாக இருந்தார். அதோடு வழக்கத்திற்கு மாறாக தனது கையில் ஒரு கருப்பு நிற செல்போனையும் அஜித் வைத்திருந்தார்.
அஜித் செல்போனை பயன்படுத்துவார் என்பதே பலரும் இப்போதுதான் பார்க்கிறார்கள்.
அந்த செல்போனில் செல்பி வீடியோவையும் எடுத்தார் அஜித். இந்நிலையில் அஜித் பயன்படுத்திய அந்த செல்போன் Samsung S21FE மாடல். அதன் விலை 33-லிருந்து 35 ஆயிரம் மட்டுமே. அஜித் எளிமையானவர் என பலரும் சொல்வார்கள். ஆனால், செல்போனிலும் எளிமை தெரிகிறது என நெட்டிசன்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

