தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு 234 தொகுதிகளிலும் துவங்கியது காலை 7 மணி முதல் பொதுமக்கள் பொதுமக்கள் வாக்களிக்க ஆர்வம் காட்டினார்கள். இதன் காரணமாக மாலை 3 மணிக்கு தமிழகத்தில் வாக்குப்பதிவு 70 சதவீதத்தை தொட்டது. மாலை 5 மணி நிலவரப்படி தமிழகத்தில் 82.24 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது.அதற்குப் பின்னும் ஒரு மணி நேரம் இருந்ததால் கண்டிப்பாக 2026 சட்டமன்ற தேர்தலின் மொத்த வாக்குப்பதிவு 85 சதவீதத்தை தாண்டிவிடும் என கணிக்கப்படுகிறது.
இந்நிலையில், ஆச்சரியம் கொடுக்கும் விதமாக மாலை 5 மணி நிலவரப்படி சென்னையில் 81.34 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. 2021 சட்டமன்ற தேர்தலில் சென்னையில் 55.31 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில் அதைவிட அதிகமாக தற்போது பதிவாகியிருக்கிறது.
பொதுவாக சென்னையில் பெரும்பாலானவர்கள் ஓட்டு போடுவதற்கு அதிகம் பேர் ஆர்வம் காட்டாமாட்டார்கள். ஆனால் இந்த முறை மிகவும் அதிகமான வாக்கு பதிவு சென்னையில் நடந்திருப்பதை பார்க்கும்போது ஒரு மாற்றத்திற்கு சென்னை மக்கள் தயாராகி வருவதை உணர முடிகிறது.

