சினிமா

ஜனநாயகன் படத்தின் எடிட்டர் நீக்கம்!.. எடிட்டர் சங்கம் அதிரடி நடவடிக்கை

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜனநாயகன். இந்த திரைப்படத்தை கே.விஎன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. மேலும் மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படம் கடந்த ஜனவரி 9ம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால், படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் படம் வெளியாகவில்லை.

தற்போது படம் மறுத்தணிக்கையில் இருக்கிறது.. ஆனால் இப்போது படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் கொடுக்கப்படவில்லை. எனவே மே மாதம்தான் இந்த படம் வெளியாகும் என ஏற்கனவே செய்திகள் வெளியானது. ஆனால் திடீரென ஜனநாயகன் முழு படமும் சில நாட்களுக்கு முன்பு இணையத்தில் கசிந்தது.

டவுண்ட்லோட் லின்க்கை பலரும் வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். அதை டவுன்லோட் செய்து பலரும் படத்தை பார்த்தார்கள். இது தயாரிப்பாளருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீசாரின் விசாரணையில் ஒரு ஃப்ரீலான்ஸ் வீடியோ எடிட்டர்தான் இதற்கு காரணம் என்ன கண்டுபிடிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில்தான் ஜனநாயகன் படத்தின் எடிட்டராக பணிபுரிந்த பிரதீப் ராகவை தென்னிந்திய திரைப்பட தொகுப்பாளர் சங்கம் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்துள்ளது. படம் லீக் ஆனதற்கு பிரதீப் ராகவ் காரணம் இல்லை என்றாலும், சங்கத்தில் உறுப்பினர் அல்லாத ஒருவரை வைத்து எடிட்டிங் பணிகளை அவர் செய்ததே இந்த பிரச்சனைக்கு காரணம் என்பதால் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்