ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரஜினி நடிக்கவுள்ள புதிய படத்திலிருந்து சுந்தர்.சி விலகியதும் அவருக்கு பதில் சிவகார்த்திகேயனை வைத்து டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்குனராக அறிவிக்கப்பட்டார். ஆனால் அவரும் அந்த படத்திலிருந்து விலகப் போவதாகவும் அவருக்கு பதில் ஓ மை கடவுளே, டிராகன் ஆகிய படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து ரஜினி படத்தை இயக்கப் போவதாகவும் செய்திகள் அடிபட்டது.
அதேநேரம் கதையில் ரஜினி சொன்ன மாற்றங்களை சிபி சக்கரவர்த்தி செய்து வருவதாகவும் ரஜினிக்கு அதில் முழு திருப்தி ஏற்பட்டால் சிபி சக்கரவர்த்தி இயக்குனராக தொடர்வார் எனவும் செய்திகள் கசிந்தது. எனவே ரஜினி 173வது படத்தை இயக்கப் போவது சிபி சக்கரவர்த்தியா? அஸ்வத் மாரிமுத்துவா? என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.
இநிந்லையில்தான், ரஜினியை வைத்து தான் இயக்கவுள்ள படத்தில் ரஜினியின் நண்பர் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் கமலை ஒரு கேமியோ வேடத்திலும், இயக்குனர் ஷங்கரை வில்லனாகவும் நடிக்க வைக்கலாம் என சிபி பரிந்துரை செய்ததாகவும் அதற்கு அவர்கள் இருவருமே ஒப்பு கொண்டதாகவும் தற்போது செய்திகள் வெளியாகியிருக்கிறது.
அதேநேரம் சிபி சக்கரவர்த்தியை ரஜினி டிக் அடித்தால் மட்டுமே இது நடக்கும்.. ஒருவேளை அவருக்கு பதில் அஸ்வத் மாரிமுத்து வந்தால் இது நடக்க வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

