இந்தியா

முதல்வர் கொடைக்கானல் போனதுக்கு பின்னாடி ஒரு செண்டிமெண்ட் இருக்கு!.. இதான் மேட்டரா?

தமிழகத்தில் கடந்த 23ஆம் தேதி சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு முடிந்தது. கடந்த ஒரு மாத காலமாகவே திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் ல பல தொகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டார். ஒரு நாள் கூட இடைவெளி விடாமல் அவர் வெயில் நேரத்திலும் பிரச்சாரம் செய்தார்.

ஒருபக்கம் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்குகளை பிரிப்பது, அவர்களோடு பேரம் பேசுவது, வெயிலில் பிரச்சாரத்துக்கு அலைவது என அவர் தேர்தல் பணிகளை மேற்கொண்டார். இந்நிலையில்தான் தேர்தல் முடிந்த நிலையில் இன்று தனது குடும்பத்துடன் அவர் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

இதற்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் அவர் இன்று காலை மதுரை வந்தார். அங்கிருந்து கார் மூலம் அவர் தனது குடும்பத்தாருடன் கொடைக்கானலுக்கு புறப்பட்டு சென்றார். அங்கு வருகிற 28ம் தேதி வரை அவர் அங்கு ஓய்வெடுப்பதாகவும் அதன்பின் அவர் சென்னை திரும்பதாகவும் சொல்லப்படுகிறது.

ஒருபக்கம், முதல்வர் ஸ்டாலின் கொடைக்கானலை தேர்ந்தெடுத்ததற்கு பின்னணியில் ஒரு காரணம் சொல்லப்படுகிறது. இதற்கு முன் சில தேர்தல்களில் அவர் ஓட்டுப்பதிவுக்கு பின் கொடைக்கானலில் தங்கியிருந்து சென்றார். அப்போதெல்லாம் அந்த தேர்தலில் திமுக மாபெரும் வெற்றியை பெற்றதாக சொல்லப்படுகிறது. அதானால், அந்த செண்டிமெண்ட் காரணமாகவும் அவர் கொடைக்கானலை தேர்ந்தெடுத்ததாக சொல்லப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்