இலங்கை

அமெரிக்க தபால் துறைக்குச் செலுத்த வேண்டிய பணம் மாயம்!

இலங்கையிலிருந்து அமெரிக்க அஞ்சல் சேவைக்கு அனுப்பப்பட்ட 625,000 டொலர் தொடர்பான மற்றொரு பணப் பிரச்சினை குறித்து, அந்தப் பணம் தங்களுக்குக் கிடைக்கவில்லை என அமெரிக்க அதிகாரிகள் உள்ளூர் அதிகாரிகளுக்குத் தெரிவித்ததை அடுத்து, அது தொடர்பான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.

இணையவழி மோசடியுடன் தொடர்புடையதாகக் கூறப்படும், திறைசேரி நிதியிலிருந்து 2.5 மில்லியன் டொலர் அண்மையில் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டது குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதமாக அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

இதன்போது, தபால் விவகாரம் குறித்துப் பேசிய அமைச்சர், குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் தபால் திணைக்களமும் இணைந்து இது குறித்த விசாரணைகளை நடத்தி வருவதாகத் தெரிவித்தார்.

மேலும், இந்தப் பரிவர்த்தனைகள் இரண்டு வெவ்வேறு சமயங்களில் மேற்கொள்ளப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இலங்கை

விபுலானந்தர் பிறந்த மண்ணான காரைதீவு பிரதேசத்தின் கலாசார விழா -2025

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் பிறந்த மண்ணான கிழக்கு மாகாண, காரைதீவு பிரதேசத்தின் கலாசார விழா காரைதீவு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் கே. சுதர்சனின் நெறிப்படுத்தலில்
இலங்கை

மீண்டும் வரலாற்றுச் சாதனை படைத்த கொழும்பு பங்குச்சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (04.11.2025) வரலாற்றில் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்துள்ளது. அதன்படி அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண்