ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், அரச பயணம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சுவை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
அபேசேன, பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துய்யகொந்தா, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் (ஐரோப்பா, வட அமெரிக்கா, கிழக்கு ஆசியா மற்றும் ஓசியானியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் மத்திய ஆசியா, தெற்காசியா, மத்திய கிழக்கு மற்றும் சட்டப் பிரிவு) எம். ஆர். கே. லெனகல மற்றும் மாலைதீவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் முகமது ரிஸ்வி ஹசன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

