இந்தியா

ஆட்டம் காட்டும் பாஜக!. சைலண்ட் மோடில் விஜய்!.. அமைதியா இருந்தா அரசியலுக்கு செட்டாகுமா?

பொதுவாகவே விஜய் மிகவும் அமைதியான சுபாவம் கொண்டவர். அதிகம் பேசாதவர்.. அவர் நடிக்கும் ஷூட்டிங்கில் ஏதாவது பிரச்சனை என்றால் கூட எதிலும் தலையிட மாட்டார்.. கூலாக கேரவனுக்குள் போய்விடுவார். ஷாட் ரெடி என்றால் வெளியே வந்து நடித்துவிட்டு மீண்டும் கேரவனுக்கு போய்விடுவார். இதுதான் விஜய். கேட்டால் ‘கடுப்பேத்துறவன்கிட்ட கம்முனும் உசுப்பேத்தறவன்கிட உம்முன்னும் இருந்தா வாழ்க்கை ஜம்முனு இருக்கும்’ என தத்துவம் பேசுவார்.

சரி நடிகராக இருந்தவரை அவர் அமைதியாக இருந்தால் யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை/ ஆனால் அரசியலுக்கு வந்த பிறகும் அவர் அமைதியாகவே இருப்பதுதான் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. கரூரில் பலரும் உயிரிழந்தபோது மூன்று நாட்கள் கழித்து வீடியோ போட்டார்.. அதிலும் சினிமா ஹீரோ போல பன்ச் டயலாக் பேசினார்.தனக்கெதிராக திமுக முழுக்க முழுக்க சதி செய்தாக நம்பிய விஜய் திமுகவை தீய சக்தி என கடுமையாக விமர்சிக்க துவங்கினார்.. ஆனால் திமுகவோ விஜயின் பெயரை கூட சொல்லாமல் பதில் சொல்லி வந்தது.

ஜனநாயகன் பட பிரச்சனைக்கு எல்லோரும் குரல் கொடுத்தார்கள்.. விஜய் அமைதியாக இருந்தார்.. விஜயோடு திரிஷாவை இணைத்து நயினார் நாகேந்திரன் பேசியபோது எல்லாரும் திட்டினார்கள்./ விஜய் அமைதியாக இருந்தார்.. சங்கீதா நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்தபோதும் விஜய் அமைதியாக இருந்தார். தற்போது விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்காமல் இருப்பது தவறு என எல்லோரும் குரல் கொடுக்கிறார்கள். ஆனால், இப்போதும் விஜய் அமைதியாகவே இருக்கிறார்.

இதுவே திமுகவாக இருந்தால் ‘என்ன ஸ்டாலின் சார்? என்னை பார்த்து பயமா? ஏன் சதி பண்ணுறீங்க?’ என பன்ச் டயலாக் பேசியிருப்பார். ஆனால், மத்திய அரசின் கீழ் ஆளுநர் இருப்பதலும், அதுவும் ஆளுநரை இயக்குவவே பாஜகதான் என தெரிந்தும் விஜய் அமைதியாகவே இருக்கிறார்.

அரசியல்ரீதியாக தனக்கு ஒரு பிரச்சனை வந்தால் அதைப் பற்றி பேச வேண்டும். சரி.. செய்தியாளர்களை சந்திப்பதில் விஜய்க்கு அலர்ஜி என்றால் ‘மக்கள் தவெகவுக்கு வாக்களித்திருக்கிறார்கள். என்னிடம் இவ்வளவு எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள்.

பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியது ஆளுநர் மாளிகை அல்ல.. சட்டமன்றத்தில்தான்’ என ஏற்கனவே உச்சநீதிமன்றம் சொன்னதை மேற்கோள் காட்டி ஆளுநருக்கு எதிராக விஜய் இந்நேரம் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்க வேண்டும்.. ஆனாலும் அமைதியாகவே இருக்கிறார். தவெக நிர்வாகிகளும் அமைதியக இருக்கிறார்கள். திமுக உட்பட விஜயை கடுமையாக விமர்சித்தவர்கள் பலரும் ஆளுநரை விமர்சித்து வருகிறார்கள். ஆனாலும், சைலண்ட் மோடில் இருக்கிறார் விஜய்!

அமைதியாக இருப்பது அரசியலுக்கு செட் ஆகுமா விஜய்?

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்