ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள திரைப்படம் கருப்பு. இந்த திரைப்படம் உருவாகிய பல மாதங்களாகியும் சில காரணங்களால் வெளியாகவில்லை. குறிப்பாக இந்த படத்தின் ஓடிடி உரிமை விற்கப்படாமல் இருந்தது. தற்போது அந்த பிரச்சனையெல்லாம் சரியாகி வருகிற 14-ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதோடு சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லரும் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. வழக்கறிஞர் மற்றும் கருப்பண்ணசாமி என இரண்டு வேடங்களில் சூர்யா இந்த படத்தில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில், இந்த படத்திற்கு வருகிற 14 மற்றும் 15 ஆகிய இரண்டு நாட்களுக்கும் காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை காட்சிகளை திரையிட்டுக் கொள்ளலாம் என தமிழக அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. தற்போது சூர்யாவின் நண்பர் விஜய் தமிழகத்தின் முதலமைச்சராக மாறியிருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

