மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று முதல் முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. சுவேந்து அதிகாரி நேற்று முன்தினம் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். இந்த நிலையில் அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த மனோஜ் அகர்வால் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சுப்ரதா குப்தா முதல்வரின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு வெட்கக்கேடானது. நீதிமன்றங்களின் கண்கள் மூடப்பட்டுள்ளதா? உடந்தையாக இருந்தனவா? என்று திரிணாமுல் காங்கிரஸ் ஆவேசமாக தெரிவித்துள்ளது.
வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் செய்வதை மம்தா பானர்ஜி தொடக்கத்தில் இருந்தே எதிர்த்து வந்தார். இது தொடர்பாக உச்சநீதிமன்றம் வரை சென்று போராடினார். ஆனால் மம்தா பானர்ஜிக்கு வெற்றி கிடைக்கவில்லை.
தேர்தலின்போது தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு உதவி செய்வதாக குற்றம்சாட்டினார். இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சாகேத் கோகாலே கூறுகையில் “இது வெட்கக் கேடானதற்கும் மேலானது என்று தெரிவித்துள்ளார். அத்துடன், “இந்த நடவடிக்கை, பாஜக-வும் இந்தியத் தேர்தல் ஆணையமும் தேர்தலைத் திருடுவதில் வெளிப்படையாக செயல்படுகின்றன என்பதை உணர்த்துவதாக அமைந்துள்ளது என்றார்.

