சினிமா

ராஜ்மோகனுக்கு என்ன தெரியும், அவருக்கு திரைப்படத்துறையா? விஷால் ஆதங்கம்…!

தமிழக அரசில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், திரைப்பட துறைக்கான இலாகா அமைச்சர் ராஜ்மோகனுக்கு ஒதுக்கப்பட்டிருப்பது குறித்து தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளரும் நடிகருமான விஷால் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுதொடர்பான செய்தி தொகுப்பு தற்பொழுது சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் ராஜ்மோகனின் நியமனம் குறித்து பேசிய நடிகர் விஷால், “அமைச்சர் ராஜ்மோகனுக்குத் திரைப்படத் துறை இலாகா ஒதுக்கப்பட்டது வருத்தமளிக்கிறது. இத்துறை சார்ந்த கோரிக்கைகளை, சினிமாவில் எந்தவித பின்னணியோ அல்லது முன் அனுபவமோ இல்லாத ராஜ்மோகனிடம் கொண்டு சென்று வைப்பது சரியாக இருக்குமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், 30 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் பயணித்து தற்பொழுது முதலமைச்சராக இருக்கும் விஜயிடம் இக்கோரிக்கைகளை வைப்பதுதானே சரியாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், தனது இந்த அறிக்கை அமைச்சர் ராஜ்மோகனைச் சிறுமைப்படுத்தும் நோக்கத்தில் சொல்லப்பட்டது அல்ல என்றும், இது முற்றிலும் தனது சொந்த கருத்து மட்டுமே என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். திரைத்துறையின் சவால்களை நன்கு அறிந்த ஒருவரிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டால் நன்றாக இருக்கும் என்ற நோக்கிலேயே விஷால் இவ்வாறு பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்