இந்தியா

மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. ஒரே வாரத்தில் இருமுறை உயர்ந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

உலகளாவிய எரிசக்தி சந்தையில் நிலவி வரும் பதற்றமான சூழல்களுக்கு மத்தியில், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தியுள்ளன.

கடந்த ஐந்து நாட்களில் மட்டும் எரிபொருள் விலை இரண்டாவது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது வாகன ஓட்டிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய அறிவிப்பின்படி, பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு சராசரியாக 90 பைசா வரை உயர்த்தப்பட்டுள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள மேற்காசிய போர் சூழலால் உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாக முடங்கியுள்ளது. குறிப்பாக, முக்கிய வர்த்தக பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து பாதிப்பால், ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 110 டாலர் வரை உயர்ந்துள்ளது.

மேலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதும் இந்த இறக்குமதி செலவை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்த அதிரடி மாற்றத்தால், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.104.49 ஆகவும், டீசல் விலை ரூ.96.11 ஆகவும் உயர்ந்து விற்பனையாகிறது.

கடந்த நான்கு ஆண்டுகளாக மாற்றமில்லாமல் இருந்த எரிபொருள் விலை, தற்போது ஒரே வாரத்தில் இரண்டு முறை உயர்ந்துள்ளதால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்