ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கக் கூடாது எனக்கூறி அமெரிக்காவும், இஸ்ரேலும் அந்த நாட்டின் மீது போரை துவங்கியது. அந்த போரில் ஈரானின் உட்ச தலைவர் கமேனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார். இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக அமெரிக்க ராணுவத்தளங்கள் அமைக்கப்பட்டிருக்கும் வளைகுடா நாடுகளின் மீது ஈரான் கடுமையான தாக்குதலை நடத்தியது.
இதில் பல எண்ணெய் கிணறுகள் சேதமடைந்தது. ஒருபக்கம் வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியாவில் உள்ள பல நாடுகளுக்கும் எண்ணெய் கப்பல்கள் செல்லும் ஹார்மூஸ் நீரிணையை ஈரான் அரசு மூடிவிட்டது. இதன் காரணமாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. எனவே ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துவிட்டது. குறிப்பாக ஹோட்டலில் பயன்படுத்தப்படும் வணிக சிலிண்டர் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது.
ஒருபக்கம், கச்சா எண்னெய் தட்டுப்பாட்டால் இரண்டு முறை இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. இப்படியே போனால் இந்திய பொருளாதாரத்தில் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என பொருளாதார வல்லுநர்களை எச்சரிக்கிறார்கள். இந்நிலையில், ரஷ்ய அதிபர் புடின் மற்றும் சீன அதிபர் ஜின் பிங் இருவரும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் அமெரிக்காவின் நடவடிக்கைகளுகுக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.
உலகில் மீண்டும் காட்டாட்சி அமலுக்கு வரும் அபாயம் இருக்கிறது.. அமெரிக்காவும், இஸ்ரேலும் சர்வதேச சட்டங்களை மீறுகின்றன என அவர்கள் குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.

