இந்தியா

ஆட்சியமைப்பது பற்றி ஸ்டாலின் சொன்னது இதுதான்!.. மார்க்சிஸ்ட் சண்முகம் பேட்டி!

நடந்த முடிந்த 2026 சட்டமன்ற தேர்தலில் தவெகவுக்கு 108 தொகுதிகளும், திமுகவுக்கு 74 தொகுதிகளும் கிடைத்தன. அதிமுகவுக்கு 47 தொகுதிகள் கிடைத்தது. எனவே, அதிக தொகுதிகளில் வெற்றி என்கிற அடிப்படையில் தவெக ஆட்சியமைக்க முயற்சி செய்தது. திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக் போன்ற கட்சிகளின் ஆதரவை பெற்று தவெக ஆட்சி அமைத்தது.

ஆனால், தவெக ஆட்சியமைவதை தடுப்பதற்காக திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சியமைக்க முயற்சி செய்ததாக செய்திகள் வெளியானது. முதல்வராக திருமாவளவன், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை முன்னிறுத்தி பேச்சுவார்த்தை நடந்ததாக செய்திகள் வெளியானது. இதை சிவி சண்முகம், திருமாவளவன் ஆகியோர் வெளியே சொல்லிவிட்டனர். அதோடு, திமுகவின் இந்த முடிவை கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏற்கவில்லை என சொல்லப்பட்டது.

இதை கையிலெடுத்த தவெக திமுகவை விமர்சனம் செய்து வருகிறது. இந்நிலையில், இதுபற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பே.சண்முகம் ‘விஜயால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போயிருந்தால் அடுத்த வாய்ப்பு திமுகவுக்கு உள்ளது. மூன்றாவதாக அதிமுகவுக்கு செல்லும்.. சட்டப்படி அப்படித்தான் அழைக்க முடியும். ஒருவேளை விஜயால் ஆட்சி அமைக்க முடியாமல் போனால் அந்த வாய்ப்பை நாம் பயன்படுத்தலாம் என்று திமுக யோசித்திருக்கலாம்.. முக ஸ்டாலினும் எங்களிடம் இதைத்தான் கூறினார்’ என அவர் கூறியிருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்