சினிமா

சிவகார்த்திகேயன் படத்தால் 120 கோடி கடன்!.. 50 கோடி இழப்பு!.. புலம்பும் தயாரிப்பாளர்!

சிவகார்த்திகேயனுக்கு ஒரு படம் ஹிட் அடித்தால் நான்கு படங்கள் தோற்றுப் போகும்.. அவர் நடிப்பில் வெளியான அமரன் படம் சூப்பர் ஹிட் அடித்து 300 கோடி வசூல் செய்தது. ஆனால் அதன் பின் வெளிவந்த பராசக்தி, மதராஸி ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடிக்கவில்லை.

தற்போது ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் தாய்க்கிழவி பட இயக்குனர் இயக்கத்தில் சேயோன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில்தான் சிவகார்த்திகேயனை வைத்து ஹீரோ மற்றும் அயிலான் ஆகிய இரண்டு படங்களையும் தயாரித்த கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தலைவர் கோட்டப்பாடி ஜே.ராஜேஷ் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசியபோது ஒரு முக்கிய தகவலை கூறினார்.

திட்டமிட்டபடி படங்கள் வெளியாகவில்லை. கொரோனா ஊரடங்கால் வட்டி எகிறியதால் 90 கோடியக இருந்த கடன் தற்போது 120 கோடியாக உயர்ந்து விட்டது. இந்த இக்கட்டான சூழ்நிலையால் நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் 55 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டது. ஒப்பந்தத்தின்படி நாங்கள் இருவரும் இணைந்து மீண்டும் இரண்டு படங்கள் பண்ண வேண்டும்.. ஆனால் அது எப்போது நடக்கும் என்று கடவுளுக்குதான் தெரியும்’ என்று ராஜேஷ் கூறியிருக்கிறார்..

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்