சினிமா

ராம்சரணின் ‘பெத்தி’ திரைப்படம் எப்படி இருக்கு?!

தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ராம்சரண். ராஜமௌலி இயக்கத்தில் இவர் நடித்த மகதீரா, RRR ஆகிய திரைப்படங்கள் பேன் இண்டியா ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. RRR படத்தில் இவர் ஜூனியர் என்.டி.ஆருடன் இணைந்து நடனமாடிய பாடலுக்கு ஆஸ்கர் விருதும் கிடைத்தது.

இந்நிலையில்தான், புஜ்ஜி பாபு இயக்கத்தில் ராம்சரண் நடித்து உருவான Peddi திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகியிருக்கிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் இன்று படம் பார்த்த ரசிகர்கள் படம் எப்படி இருக்கிறது என எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

Peddi ஒரு அழகான திரைப்படம்.. வேறென்ன அதிகமாக நாம் எதிர்பார்க்க முடியும்?.. முதல் முறையாக ராம்சரணை பார்க்கும் போது ஒரு முழு நடிகர் என்கிற உணர்வு வருகிறது. சண்டை காட்சிகளிலும், நடனத்திலும் அசத்தியிருக்கிறார். இளைஞர்களுக்கு தேவையான படம் என யூடியூப் பிரசாந்த் ரங்கசாமி பதிவிட்டிருக்கிறார்.

Peddi ஒரு நல்ல கதை.. அதேபோல் சிறந்த திரைக்கதை.. என பிரபல சினிமா விமர்சகர் பரத்வாஜ் ரங்கன் பதிவிட்டிருக்கிறார். ராம்சரண் அசத்தலாக நடித்திருக்கிறார்.. அவர் ஒரு விளையாட்டு வீரராக இருக்கிறார்.. கிரிக்கெட் விளையாடுகிறார். மல்யுத்த வீரராக இருக்கிறார்.. ஓட்டப் பந்தய வீரராகவும் இருக்கிறார். இந்த படத்தில் நிறைய டிவிஸ்ட்டும் இருக்கிறது’ என பதிவிட்டு இருக்கிறார். Peddi திரைப்படத்தை ராம்சரனின் நடிப்புக்காகவும் ஏ.ஆர் ரஹ்மான் இசைக்காவும், கதைக்காகவும் பார்க்கலாம்’ என பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்