அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் கட்டாய ஊழியர் உழைப்பு பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில், கனடா உள்ளிட்ட முக்கிய வர்த்தகப் பங்காளிகள் மீது கூடுதல் வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. குறைந்தது 10 சதவீத வரி விதிப்பு இருக்கும் என அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியின் அறிக்கை தெரிவிக்கின்றது.
புதன்கிழமை வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், கனடா, மெக்சிகோ, தைவான் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் 10 சதவீத கூடுதல் வரியைச் செலுத்த நேரிடும் எனக் கூறப்பட்டுள்ளது. டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் இந்தப் பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து கருத்துத் தெரிவித்த அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர், கட்டாய உழைப்பால் தயாரிக்கப்பட்ட பொருட்களின் இறக்குமதியைக் கையாள்வதில் வர்த்தகப் பங்காளிகள் தவறுவது கண்டிக்கத்தக்கது என்றார். இந்த நடவடிக்கை உலகளாவிய வர்த்தகச் சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

