உலகிலேயே நீளமான பாலைவனம் சகாரா பாலைவனம்தான். சுமார் 9.2 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது இந்த பாலைவனம். வட ஆப்பிரிக்கா உள்ளிட்ட 11 நாடுகளில் இந்த பாலைவனம் நீள்கிறது.
இந்நிலையில்தான் வடக்கு நைஜீரியாவில் உள்ள சகாரா பாலைவனத்தின் தொலைதூரப் பகுதியில் பயணிகளை ஏற்றி சென்ற ஒரு லாரி பழுதடைந்து நின்றது. பல மணி நேரங்கள் பழுதை சரி செய்யமுடியவில்லை. இதனால், பல மணி நேரங்கள் அவர்கள் அங்கு காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. அதோடு, அவர்களுக்கு குடிப்பதற்கு தேவையான தண்ணீரும் கிடைக்கவில்லை. எனவே, பலரும் தாகத்தில் வாடினார்கள்.
அதில், 49 பேர் தாகத்தால் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நடு பாலைவனத்தில் மாட்டிக் கொண்ட அவர்களின் இருவர் மட்டுமே உயிர் தப்பியிருக்கிறார்கள். பாலைவனத்தை கடந்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த நிலையில் உயிரிழந்தவர்கள் உடல் தற்போது மீட்கப்பட்டிருக்கிறது.

