பாகுபலி திரைப்படம் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் ராஜமௌலி. அதுவும் பாகுபலி 2 திரைப்படம் உலகமெங்கும் 1500 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அதேபோல் அடுத்த வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படமும் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது மகேஷ் பாபுவை வைத்து வாரணாசி என்கிற திரைப்படத்தை ராஜமவுலி இயக்கி வருகிறார்.
படம் கிட்டத்தட்ட முடியும் நிலைக்கு வந்துவிட்டது. இந்நிலையில்தான், தயாரிப்பாளருக்கு ஒரு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இந்த படம் துவங்கிய போது ஓடிடி வியாபாரம் உச்சத்தில் இருந்தது. ஆனால் அதன்பின் அந்த வியாபாரம் படுத்துவிட்டது. நெட்பிளிக்ஸ், அமேசான் போன்றா நிறுவனங்கள் புதிய படங்களை மிகவும் குறைவான விலைக்கு மட்டுமே வாங்குகிறார்கள்..
வாரணாசி படத்தை பொறுத்தவரை நெட்பிளிக்ஸ் நிறுவனத்துடன் பேசி வருகிறார்கள். ஆனால் அவர்கள் சொல்லும் தொகைக்கு வாங்க நெட்பிளிக்ஸ் நிறுவனம் மறுத்துவிட்டது. அதோட மும்பையில் உள்ள தலைமை அலுவலக அதிகாரிகள் இதற்கு மேல் எங்களால் விலையை நிர்ணயிக்க முடியாது என்று சொல்ல பட குழு லண்டனில் உள்ள நெட்பிளிக்ஸ் தலைமைக்கு அலுவலகத்து சென்றுவிட்டனர்.
இந்த விலைக்கு படத்தை வாங்கிக் கொள்ளுங்கள் என்று பேரம் பேசி வருகிறார்களாம். ஆனால் தற்போது வரை வாரணாசி படத்தின் ஓடிடி வியாபாரம் பேசி முடிக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது. தயாரிப்பாளர் சொல்லும் விலைக்கு ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் வாங்கினால்தான் இந்த படம் தயாரிப்பாளருக்கு ஒரு லாபகரமான படமாக அமையும் என சினிமா வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

