ஈரான் நாட்டின் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதலை தொடங்கியது. ஈரான் அணு ஆயுதம் வைத்துக்கொள்ளக் கூடாது இந்த போருக்கு காரணமாக இருந்தது. ஆனால் அமெரிக்காவுக்கு ஈரான் அடிபணியாமல் திரும்பி தாக்க துவங்கியது.
வளைகுடா நாடுகளில் அமெரிக்காவின் ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தொடர்ந்து தாக்கி வருகிறது. அதேநேரம், பாகிஸ்தானியின் முயற்சியால் தற்போது போர் நிறுத்தப்பட்டிருக்கிறது. அதேநேரம் அவ்வப்போது இரு நாடுகளும் தாக்கி கொள்கின்றன. ஒருபக்கம் ஈரானின் நட்பு நாடான லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நிகழ்த்தி வருகிறது. இதனால் கோபமடைந்த ஈரான் இஸ்ரேலை தாக்கி வருகிறது..
ஈரானுடன் போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் இறங்கியிருக்கிறார். அமைதிப் பேச்சுவார்த்தை விரைவில் முடிந்துவிடும் எனவும் அவர் கூறியிருக்கிறார். ஆனால், ஈரான் மீது இஸ்ரேல் தாக்கியது அவருக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஈரானும், இஸ்ரேலும் மீண்டும் போரிட தொடங்கியிருப்பது அவருக்கு பிடிக்கவில்லை.
இந்நிலையில்தான், டிரம்ப் தனது சமூகவலைத்தள பக்கத்தில் ‘இஸ்ரேலும் ஈரானும் மாறி மாறி நடத்தி கொள்ளும் இந்த ஏவுகணை தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும்’ என பதிவிட்டிருக்கிறார். டிரம்ப் சொல்வதை இஸ்ரேல் பிரதமர் நெதன் யாகு கேட்பாரா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

