இந்தியா

தங்கத்தில் முதலீடு செய்வதில் வீழ்ச்சி.. பங்குச்சந்தை நோக்கி திரும்பும் இந்தியர்கள்…

கடந்த ஓராண்டு காலத்தில் முதன்முறையாக, தங்க பத்திரம் சார்ந்த Gold ETFs முதலீடுகள் மே மாதத்தில் சரிவை கண்டுள்ளன. மே மாதத்தில் மட்டும் சுமார் 725 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் வெளியில் சென்றுள்ளன. கடந்த 12 மாதங்களாக தொடர்ந்து முதலீடுகள் அதிகரித்து வந்த நிலையில், தற்போது இந்த திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் தங்க இறக்குமதி செலவைக் குறைக்கும் நோக்கில், ஒரு வருடத்திற்கு மக்கள் தங்கம் வாங்குவதை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதன் தொடர்ச்சியாக, மத்திய அரசு தங்கம் மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தியது. மேலும், சில பரஸ்பர நிதி நிறுவனங்கள் தங்க இடிஎஃப்-களில் புதிய முதலீடுகளை ஏற்பதை தற்காலிகமாக நிறுத்தின.

தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் உச்சத்தில் இருக்கும் இந்த வேளையில், முதலீட்டாளர்கள் தங்களின் லாபத்தை உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு எடுத்துள்ளனர். மே மாதத்தில் புதிய முதலீடாக 2,605 கோடி ரூபாய் வந்தபோதிலும், 3,330 கோடி ரூபாய் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

இருப்பினும், தங்க விலை உயர்வால் ஒட்டுமொத்த மேலாண்மையின் கீழ் உள்ள சொத்து மதிப்பு ஏப்ரல் மாதத்தில் இருந்த 1.78 லட்சம் கோடியிலிருந்து, மே மாத இறுதியில் 1.85 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்திய முதலீட்டாளர்கள் தற்போது தங்கம் விடுத்து, நீண்ட கால லாபத்திற்காக பங்குச்சந்தையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளதை இது காட்டுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்