சினிமா

நீங்கள் கொடுத்த நம்பிக்கை!.. லவ் யூ சார்!.. கருப்பு ஹீரோவை சந்தித்த ஆர்.ஜே.பாலாஜி!

சூர்யாவுக்கு பல வருடங்களாகவே சூப்பர் ஹிட் படம் அமையாத நிலையில் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் கடந்த மாதம் 15ம் தேதி வெளியான கருப்பு திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று 350 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்த ஒரு சூப்பர் ஹிட் படமாக அமைந்துவிட்டது.

இதையடுத்து கருப்பு படத்தின் ஒளிப்பதிவாளர், எடிட்டர், இசையமைப்பாளர் ஆகியோருக்கு சொகுசு கார் ஒன்றை சூர்யா பரிசளித்தார். ஆனால் இயக்குனர் ஆர்.ஜே பாலாஜிக்கு அவர் எதுவும் கொடுக்கவில்லை. கருப்பு படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு சூர்யாவின் உறவினர். படம் உருவானபோது பாலாஜிக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே பிரச்சனை வந்ததுதான் இதற்கு காரணம் என சொல்லப்பட்டது..

இந்த நிலையில்தான் சூர்யாவும், ஆர்.ஜே பாலாஜியும் தற்போது சந்தித்திருக்கிறார்கள். இது தொடர்பான புகைப்படங்களை ஆர்.ஜே.பாலாஜி தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்து ‘ முதல் நாளிலிருந்து நீங்கள் என்னை நம்பினீர்கள்.. அந்த கனவு இப்போது நினைவானது.. நீங்கள் கொடுத்த ஆதரவு என் வாழ்க்கை பயணமாக மாறியிருக்கிறது..

கருப்பு நடந்தது… நான் உங்களுக்கு கொடுத்த சத்தியத்தை காப்பாற்றி விட்டேன்.. கருப்பு பிளாக்பஸ்டர் ஆகிவிட்டது.. சூர்யா சார் இல்லாமல் இது சாத்தியம் இல்லை.. நீங்கள் என் வாழ்க்கையை மாற்றி விட்டீர்கள்.. என் மீது நீங்கள் வைத்த நம்பிக்கை மரியாதை ஆகியவற்றுக்கு நன்றி’ என பதிவிட்டிருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்