சினிமா

ஆர்.ஜே.பாலாஜிக்கு காஸ்ட்லி காரை பரிசளித்த சூர்யா!.. இதான் மேட்டரா!

ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து கடந்த மாதம் 15ம் தேதி வெளியிட திரைப்படம் கருப்பு. இந்த திரைப்படம் 340 கோடிக்கு மேல் வசூலை அள்ளிவிட்டது. 10 வருடங்களுக்கு பின் சூர்யாவுக்கு ஒரு மகத்தான வெற்றி கிடைத்திருக்கிறது. எனவே சூர்யா மகிழ்ச்சியில் இருக்கிறார்.

அந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதற்காக கருப்பு படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர், எடிட்டர் மற்றும் இசையப்பாளர் மூவருக்கும் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் ஒன்றை அவர் பரிசளித்தார். அதேநேரம் கருப்பு படத்தின் இயக்குனர் ஆர்.ஜே பாலாஜிக்கு சூர்யா கார் பரிசளிக்கவில்லை..

இதற்கான காரணம் யாருக்கும் தெரியவில்லை. இந்த படம் உருவாகும் போது ஆர்.ஜே பாலாஜிக்கும் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபுவுக்கும் முட்டிக்கொண்டது. காரணம் சொன்ன பட்ஜெட்டை விட 40 கோடிகள் அதிகமாக செலவு செய்திருக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி. படத்தின் தயாரிப்பாளர்கள் தனது நெருங்கிய உறவினர் என்பதால் சூர்யாவும் பாலாஜி மீது கோபத்தில் இருந்ததால்தான் அவருக்கு கார் வாங்கி கொடுக்கவில்லை என சிலர் சொன்னார்கள். ஆனால், படத்தின் வெற்றி எல்லாவற்றையும் மாற்றிவிட்டது.

மேலும், அந்த மூன்று பேருக்கும் கொடுத்த கார் தனக்கு வேண்டாம் ஆர்.ஜே. பாலாஜி சொன்னதால்தான் சூர்யா அப்போது கார் கொடுக்கவில்லை என்கிறார்கள். தற்போது ஆர்.ஜே.பாலாஜி கேட்ட Toyoto Innova காரை சூர்யா அவருக்கு வாங்கி கொடுத்துவிட்டாராம். இந்த கார் அவர்கள் 3 பேருக்கும் கொடுத்த காரின் விலையை விட ரூ.10 லட்சம் அதிகம் என சொல்லப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்