இந்தியா

சில்லரை கடைகளில் மொத்தமாக டீசல் விற்பனை இல்லை

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள புவிசார் அரசியல் பதற்றம் மற்றும் சர்வதேச விநியோக சங்கிலி பாதிப்பு காரணமாக, இந்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் ஜூன் 11, அன்று ஒரு புதிய தற்காலிக உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன்படி, தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பெருநிறுவனங்கள் போன்ற மொத்த நுகர்வோர் சில்லறை பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் வாங்குவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

டெல்லியில் சில்லறை விற்பனையில் ஒரு லிட்டர் டீசல் ரூ.95.20-க்கு விற்கப்படும் வேளையில், மொத்த நுகர்வோருக்கு அது ரூ.134.50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை வித்தியாசத்தால், பொதுமக்களுக்கான சில்லறை பங்குகளில் நிறுவனங்கள் அதிகளவில் டீசல் வாங்கியதால் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவானது. இதனைத் தடுக்கவே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதிய விதிகளின்படி, நிறுவனங்கள் தங்கள் சொந்த நுகர்வோர் பம்புகள் மூலமாகவே எரிபொருளைப் பெற வேண்டும். மேலும், சில்லறை பங்குகளில் வாகனங்களின் எரிபொருள் தொட்டி அல்லது அங்கீகரிக்கப்பட்ட கொள்கலன்கள் மூலம் ஒரு வாடிக்கையாளருக்கு ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 200 லிட்டர் டீசல் மட்டுமே வழங்கப்படும்;

இதனை மறுவிற்பனை செய்யக் கூடாது. இந்த கட்டுப்பாடுகள் ஆரம்பகட்டமாக 90 நாட்களுக்கு அமலில் இருக்கும். விதிகளை மீறுபவர்கள் மீது அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்