சினிமா

சினிமாவிலிருந்து விலக முடிவெடுத்தேன்!.. ஆனா அவர்!.. நிவேதா பெத்துராஜ் கலகல பேட்டி!

தமிழில் சங்கத் தலைவன், திமிரு புடிச்சவன், டிக் டிக் டிக், பொதுவாக என் மனசு தங்கம் உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்தவர் நிவேதா பெத்துராஜ். தமிழில் வாய்ப்புகள் குறைந்ததால் தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கி அங்கு சில படங்களில் நடித்தார். அது எல்லாமே இரண்டாவது கதாநாயகிதான்.

தமிழிலும் அவருக்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்புகளும் வரவில்லை. எனவே, கடந்த சில வருடங்களாகவே அவரை அதிகமாக திரைப்படங்களில் பார்க்க முடியவில்லை.

இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த நிவேதா பெத்துராஜ் ‘2023ம் வருடம் நான் சினிமாவுக்கு குட் பை சொல்லிவிட்டு சென்று விட நினைத்தேன். ஆனால் எதிர்பாராத விதமாக காலம் என்னை சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் ஒரு பிளாக்பஸ்டர் படத்தில் கொண்டு வந்து சேர்த்து விட்டது. என்னை மீண்டும் சினிமாவுக்குள் கொண்டு வந்ததற்காக இயக்குனர் நாக் அஸ்வினுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் மட்டும் இல்லையென்றால் நான் இமயமலைக்கு சென்றிருப்பேன்’ என்று கூறியிருக்கிறார்.

பிரபாஸ், கமல், தீபிகா படுகோன், அமிதாப்பச்சன் உள்ளிட்ட பலரும் நடித்த கல்கி திரைப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. சில வருடங்களுக்கு முன்பு துபாயை சேர்ந்த ஒருவருடன் நிவேதாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால், அது திருமணத்தில் முடியவில்லை.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்