2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த நிலையில் 2026 தேர்தலிலும் நாம்தான் ஆட்சி அமைப்போம் என திமுக நம்பிக்கொண்டிருந்தது. ஏனெனில் பாஜகவை அதிமுக கூட்டணியில் சேர்த்ததாலும், விஜய் கட்சி துவங்கி இரண்டு வருடங்களே ஆகியிருந்ததாலும் எப்படியும் நாம் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என திமுக கணக்கு போட்டது.
திமுக தலைவர் ஸ்டாலினும் தொடர்ந்து பிரச்சார கூட்டங்களில் 200 தொகுதிகளில் வெல்வோம் என தொடர்ந்து கூறி வந்தார். ஆனால் தேர்தல் முடிவு வேறு மாதிரி அமைந்துவிட்டது. திமுக தலைவர் முக ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளரிடம் தோற்று போய்விட்டார்..
மேலும், முதல்வர் விஜய் சட்டசபையில் கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்திற்கு ஆதரவாக 140க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். அதில் ஆச்சரியம் என்னவெனில் அதிமுக எம்எல்ஏக்கள் 24 பேர் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். வருகிற 19ம் தேதி சட்டசபை கூடவிருக்கிறது.
இன்னும் ஆறு மாதங்களுக்கு அரசுக்கு எதிராக நம்பிக்கையில்ல தீர்மானத்தை கொண்டு வர முடியாது என்பதால் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர திமுக திட்டமிட்டிருப்பதாக செய்திகள் கசிந்திருக்கிறது. அதில் தவெக தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். இல்லையெனில் ஆட்சியை இழக்க நேரிடும். தற்போது மொத்த எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 229 ஆக குறைந்துள்ளது. அவர்களில் 115 பேரின் ஆதரவை பெற்றால் மட்டுமே நம்பிக்கை தீர்மானத்தில் தவெக வெற்றி பெற முடியும். எனவேதான் இதை திமுக கையில் எடுக்க திட்டமிட்டிருப்பதாக செய்திகள் கசிந்திருக்கிறது.
எதிர்கட்சி தலைவர் உதயநிதி இந்த தீர்மானத்தை கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், திமுக கூட்டணியில் இருந்த விசிக, முஸ்லீம் லீக், கம்யூனிஸ்ட் கட்சிகளும் தவெகவுக்கு ஆதராகவும், திமுக கொண்டு வரும் தீர்மானத்திற்கு எதிராகவும் வாக்களிக்க வேண்டும். எனவே, தமிழக அரசியலில் பரபரப்பான சம்பவங்கள் அரங்கேற வாய்ப்புண்டு.

