உலகம்

அடங்காத இஸ்ரேல்!.. ஹார்மூஸை மூடிய ஈரான்!.. டிரம்ப் பட்ட கஷ்டமெல்லாம் வீணாப்போச்சே!…

கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் போர் தொடுத்ததையடுத்து ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் கொண்டு வரப்படும் கடல் வழித்தடமான ஹார்மூஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதன் காரணமாக இந்தியாவில் உள்ள பல நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் வரவில்லை.

இதனால் கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருளின் விலை உயர்ந்தது.

எனவே போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் அமெரிக்கா இறங்கியது. சமீபத்தில் ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன..

அதில், அடுத்த 60 நாட்களுக்கு ஹார்மூஸ் திறந்திருக்க வேண்டும் என்கிற ஒப்பந்தமும் இடம் பெற்றிருந்தது. இந்நிலையில்தான், ஹார்மூஸ் திறக்கப்பட்டு இரண்டே நாளில் இன்று மீண்டும் ஹார்மூஸை ஈரான் மூடிவிட்டது. லெபனான் நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை கண்டித்து ஹார்மூஸை மூடியதாக ஈரான் ராணுவம் அறிவித்திருக்கிறது.

ஏற்கனவே ஈரானுடம் ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ள நிலையில் இஸ்ரேல் அமைதியாக இருக்க வேண்டும். ஈரான் நாட்டின் மீதோ, லெபனான் மீதோ இஸ்ரேல் தாக்குதல் நடத்தக்கூடாது. அப்படி நடத்தினால் அந்த நாடு தனித்துவிடப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏற்கனவே எச்சரித்திருந்தார். ஆனால் அவரின் எச்சரிக்கையை மீறி இஸ்ரேல் லெபனானை தாக்கி வருகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த