உலகம்

கத்தார் எரிவாயு ஆலையில் தீ விபத்து!. 12 இந்தியர்கள் பலி!..

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரான் நாட்டின் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி மாதம் தாக்குதலை தொடங்கியது. இதன் காரணமாக ஈரானில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்து போனார்கள். அமெரிக்க ராணுவத்திற்கு வளைகுடா நாடுகள் உதவி செய்தன. இதனால் கோபமடைந்த ஈரான் சவுதி அரேபியா, துபாய், கத்தார், பஹ்ரைன் போன்ற வளைகுடா நாடுகளை குறிவைத்து தாக்க தொடங்கியது.

குறிப்பாக அந்த நாடுகளின் எண்ணெய் கிணறுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. ஈரான் தாக்கியதில் கத்தாரில் ராஸ் லப்பான் பகுதியில் அமைந்துள்ள இயற்கை எரிவாயு ஆலை சேதமடைந்தது. இதனால் அங்கிருந்து மற்ற நாடுகளுக்கு எரிவாயு ஏற்றுமதி செய்யும் பணி நிறுத்தப்பட்டது. தற்போது அமைதி பேச்சு வார்த்தையின் காரணமாக அமெரிக்கா, ஈரான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டிருக்கிறது. இதை தொடர்ந்து கத்தார் அரசு மூடிக்கிடந்த எரிவாயு ஏற்றுமதி ஆணையத்தை சரி செய்யும் வேலையில் இறங்கியது..

ஊழியர்கள், பொறியாளர்கள் உள்ளிட்ட பலரும் மறு சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர், அப்போது எதிர்பாராத விதமாக அங்கு வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் ஆலை முழுவதும் தீப்பற்றி எரித்தது. இந்த கோர விபத்தில் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த 12 இந்தியர்கள் உட்பட 13 பேர் உடல் கருகி இறந்துபோனார்கள். 60க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயமடைந்திருக்கிறார்கள். மேலும் 18 தொழிலாளர்கள் மாயமாகிவிட்டனர். தீயை அணைக்கும் பணியில் கத்தார் அரசு ஈடுபட்டிருக்கிறது.. ஒரு பக்கம் தொழிலாளர்கள் மீட்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மறைவு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் டிக் செனி.(84) இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம்
உலகம்

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எந்த