இந்தியா

LPG கேஸ் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்!.. விலை குறையுமா?..

ஈரான் அணு ஆயுதம் வைத்துக் கொள்ளக் கூடாது எனக் கூறி அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி மாதம் அந்த நாட்டின் மீது போர் தொடுத்தது. இதன் காரணமாக அமெரிக்காவுக்கு உதவும் வளைகுடா நாடுகளின் மீது ஈரான் தாக்குதலை தொடங்கியது.

அதனால் வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படும் கப்பல் வழித்தடமான ஹார்மூஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதை எடுத்து இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் கச்சா எண்ணெய் செல்வது தடைபட்டது. இதன் காரணமாக வணிக சிலிண்டர், சமையல் சிலிண்டர், பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் விலை இந்தியாவில் உயர்த்தப்பட்டது.

தற்போது ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக எரிபொருட்களின் விலை மீண்டும் குறையுமா என்கிற எதிர்பார்ப்பு மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில் மத்திய கிழக்கு நாடுகளின் நெருக்கடி காரணமாக விதிக்கப்பட்டிருந்த வணிக சிலிண்டர் மீதான அனைத்து கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு முழுமையாக நீக்கியிருக்கிறது.

வணிகம் மற்றும் தொழிற்துறை நுகர்வோருக்கான விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் அதை 50 சதவீத அளவுக்கு தளர்த்துவதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. உள்நாட்டு எல்.பி.ஜி உற்பத்தி மற்றும் இறக்குமதி சீராக உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது..

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

ஜி20 மாநாட்டுக்கு டிரம்ப் வராத தைரியத்தில் சென்றுள்ள மோடி – காங்கிரஸ் கிண்டல்

ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற
இந்தியா

SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் – விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம்