90களில் முன்னணி நடிகையாக இருந்தவர் குஷ்பு. அப்போதிருந்த முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடித்திருக்கிறார். குறிப்பாக பிரபுவுடன் இவர் நடத்த படங்கள் ரசிகர்களிடம் மிகவும் நெருக்கம். இயக்குனர் சுந்தர்.சி-யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு இரண்டு மகள்கள். அதில் மூத்த மகள் அவந்திகாவுக்கு நேற்று கோவாவில் திருமணம் நடைபெற்றது. சர்வன் சீனிவாசன் என்பவரோடு அவந்திகாவுக்கு நேற்று திருமணம் நடந்தது. இந்த திருமண விழாவில் குஷ்பூக்கு நெருக்கமான திரையுலக பிரபலங்களும், குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொள்ளலாம்..
விரைவில் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் பலரும் கலந்து கொள்வார்கள் என தெரிகிறது. கோவாவில் நடந்த திருமண விழாவில் நடிகை திரிஷா, நாகார்ஜுனா, சிரஞ்சீவி, வெங்கடேஷ் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், தற்போது குஷ்பூ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகள் திருமண புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

