கீத்து மோகன்தாஸ் இயக்கத்தில் கேஜிஎப் பட ஹீரோ யாஷ் மற்றும் கியாரா அத்வானி, நயன்தாரா உள்ளிட்ட பலரும் நடித்து உருவாகியிருக்கும் திரைப்படம் டாக்சிக். கேஜிஎப் 2 திரைப்படத்திற்கு பின் யாஷ் நடித்துள்ள திரைப்படம் இது என்பதால் இந்த படம் அவரின் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
டாக்சிக் திரைப்படம் கன்னடம், தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவிருக்கிறது.
இந்த படத்துக்கு இன்னும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை. நேற்று இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு கவர்ச்சியான பாடலை படக்குழு வெளியிட்டது. இதை பார்த்து ரசிகர்கள் சூடாகியிருக்கிறார்கள்.
இந்நிலையில்தான், இந்த படத்தில் நடிகர், நடிகைகளுக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் பற்றிய விவரம் தெரியவந்துள்ளது. இந்த படத்தில் நடிகர், நடிகைகளுக்கு தற்போது வரை கொடுக்கப்பட்டுள்ள சம்பளம் மட்டுமே 100 கோடியை தாண்டியிருப்பதாக சொல்லப்படுகிறது. படத்தின் இணைய தயாரிப்பாளராகவும் இருக்கும் நடிகர் யாஷ் சம்பளத்திற்கு பதிலாக 50 கோடி முன்பணமாக பெற்றிருப்பதாகவும், படத்தின் லாபத்தில் கணிசமான பங்கு அவருக்கு கொடுக்கப்படவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதேபோல், கியாரா அத்வானிக்கு 15 கோடியும், நயன்தாராவுக்கு 12 கோடியும் சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கிறதாம்.

