சினிமா

உடம்பு சிக்குன்னு இருக்கணுமா!.. அதர்வா சொல்லும் அட்வைஸ் கேளுங்க!..

தமிழ் சினிமாவில் இதயம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா. பானா காத்தாடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். அதர்வா சினிமாவுக்கு வந்து 16 வருடங்கள் ஆகிவிட்டது. இத்தனை வருடங்களில் பல திரைப்படங்களிலும் அவர் நடித்திருக்கிறார். இளம் பெண்களை கவரும் வகையில் அதர்வா அழகாக இருப்பார். உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார். நன்றாக நடனமாடுவார்.. சண்டை காட்சிகளிலும் அசத்தலாக நடிப்பார்..

அவர் நடிப்பில் உருவாகியுள்ள இதயம் முரளி திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. எனவே இது தொடர்பான புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் அதர்வா தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார். அதோடு முதலமைச்சர் விஜயையும் நேரில் சந்தித்து அதை தொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், ஒரு பேட்டியில் ‘உடலை எப்படி இப்படி கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறீர்கள்?’ என்ற கேள்விக்கு பதில் சொன்ன அதர்வா ‘நான் என்னுடைய சாப்பாட்டை அடிக்கடி மாற்ற மாட்டேன்.. தினமும் ஒரே மாதிரியான உணவைத்தான் சாப்பிடுகிறேன். காலை உணவாக பழைய சாதம் சாப்பிடுகிறேன். மதிய உணவில் சிக்கன் மற்றும் காய்கறிகளை சாப்பிடுகிறேன்/ இரவு 7:00 மணிக்கு சாப்பாட்டை முடித்து விடுவேன்’ என டிப்ஸ் கொடுத்திருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்