அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறை பதவியேற்றது முதலே பல அதிரடியான அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் வரியை கடுமையாக உயர்த்தினார,.
இந்தியாவிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு வரிகள் அதிக அளவில் உயர்த்தப்பட்டன. ஆனால் இதற்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், அமெரிக்கா – இந்தியா இடையே பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்பட்டது. இதனையடுத்து வரியை குறைத்தார். அதேநேரம், ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தவேண்டும் என டிரம்ப் தொடர்ந்து கூறிவந்தார்.
ஒருபக்கம், ஈரான் நாட்டின் மீது போரை துவங்கினார். தற்போது வரை போர் நின்றபாடில்லை
. தற்போது மீண்டும் வரியை கையில் எடுக்கத் தொடங்கியிருக்கிறார். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் மீது 100 சதவீத வரி விதிக்கும் புதிய மசோதாவை கொண்டு வருவதற்கு அவர் முடிவு செய்திருக்கிறார்.
அதற்கு 60க்கும் மேற்பட்ட அமெரிக்க நாடாளுமன்ற எம்பிக்கள் ஆதரவு தெரிவித்திருப்பதாக சொல்லப்படுகிறது. சில ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் சார்பில் அறிமுகமாகவுள்ள இந்த மசோதாவுக்கு ட்ரம்ப் ஆதரவு தெரிவிக்கவுள்ளார். அதேநேரம் ரஷ்யாவிடமிருந்து எரிவாயு வாங்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு இதில் விதிவிலக்கு என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

