தமிழக அரசியல் களத்தில் முதலமைச்சராக முத்திரை பதித்துள்ள தளபதி விஜய்யின் கடைசி திரைப்படமான ஜன நாயகன் நேற்று திரையரங்குகளில் வெளியானது. எச். வினோத் இயக்கத்தில், கே.வி.என் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான இத்திரைப்படம், விஜய்யின் இறுதிப் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பைக் கொண்டிருந்தது.
திரையரங்குகளில் வெளியான முதல் நாளில் ஜனநாயகன் திரைப்படம் உலக அளவில் ரூ.78.27 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய அளவில் இதன் மொத்த வசூல் ரூ.48.27 கோடியாகவும் (நிகர வசூல் ரூ.41 கோடி), வெளிநாடுகளில் இதன் வசூல் ரூ.30 கோடியாகவும் உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாளில் இப்படம் ரூ.36.50 கோடி வசூல் செய்துள்ளது.
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘கூலி’ திரைப்படம் முதல் நாளிலேயே உலக அளவில் ரூ.151.14 கோடி வசூலித்து சாதனை படைத்திருந்தது. சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாகத் தயாரித்த அத்திரைப்படத்தின் சாதனையை ஜன நாயகன்’ முறியடிக்கும் என்று விஜய் ரசிகர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் காத்திருந்தனர்.ஆனால், ‘ஜன நாயகன்’ படத்தின் முதல் நாள் வசூல் ரூ.78.27 கோடியோடு நின்றுவிட்டதால், கூலி படத்தின் முதல் நாள் உலகளாவிய வசூல் சாதனையில் பாதியை மட்டுமே நெருங்க முடிந்துள்ளது. இது விஜய் ரசிகர்களிடையே ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

