சினிமா

பேமெண்ட் கொடுக்காமல் ஒடிசி படத்தை ரிலீஸ் செய்துட்டாங்க… கிறிஸ்டோபர் நோலன் மீது குற்றச்சாட்டு…

இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘தி ஒடிசி’ திரைப்படம் உலகளவில் வசூல் சாதனை படைத்து வரும் நிலையில், படப்பிடிப்பின் போது பயன்படுத்தப்பட்ட வைக்கிங் கப்பல் சேதமடைந்த விவகாரம் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இப்படத்தில் பயன்படுத்தப்பட்ட பாரம்பரிய வைக்கிங் கப்பல் பழுதடைந்த நிலையில் திரும்ப கொடுக்கப்பட்டதாகவும், அதற்கான பழுதுபார்ப்பு செலவான இந்திய மதிப்பில் சுமார் ரூ. 5 லட்சம் தயாரிப்பு நிறுவனம் இதுவரை வழங்கவில்லை என்றும் ‘வைக்கிங்லெடன்’ அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

தங்கள் தரப்பில் உழைப்புக்கான கூலியை கேட்கவில்லை என்றும், பொருள்களுக்கான செலவை மட்டுமே கோருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மறுபுறம், இந்த குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்துள்ள யுனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனம், பழுதுபார்ப்பு செலவுக்கான அனைத்து தொகையும் முறையாக செலுத்தப்பட்டுவிட்டதாக விளக்கமளித்துள்ளது. இதுகுறித்து இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

மறுபுறம், ஹோமர் எழுதிய காவியத்தை அடிப்படையாகக் கொண்டு மேட் டேமன் நடிப்பில் வெளியாகியுள்ள இப்படம், முதல் வாரத்திலேயே உலகளவில் 300 மில்லியன் டாலருக்கும் அதிகமாக வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சினிமா

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்!

அஜித்துக்கு லோகேஷ் கதை சொன்னதாகவும் அது அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் தான் ஒரு படத்தில் இணையப் போகிறார்.
சினிமா

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள்.. வைரலாகும் வீடியோ

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வெளியானது. ‘அடி அலையே..’ என்ற அந்த பாடலில் சிவகார்திகேயன் மற்றும்