ஆண்களுக்கு தாடி என்பது ஒரு அடையாளமாக இருக்கிறது. அதே நேரம் தாடியை வைத்து கொள்வதும், வைக்காமல் இருப்பதும் அவரவரின் சொந்த விருப்பமாகவும் இருக்கிறது. சிலருக்கு இயற்கையாகவே அவர்களின் உடலில் உள்ள பிரச்சினைகளால் தாடி வளராமல் இருக்கிறது. இது பலருக்கும் தாழ்மனப்பானமையும் ஏற்படுத்துகிறது.
தற்போதெல்லாம் இளைஞர்கள் விதவிதமாகவும், ஸ்டைலாகவும் தாடி வைக்கிறார்கள். அடிக்கடி சலூனுக்கு சென்று தாடிகளை டிரம்ப் செய்து செய்து கொள்கிறார்கள். இந்நிலையில்தான், அமெரிக்காவில் வசிக்கும் 30 வயது நபர் ஒருவர் 10 ஆயிரம் டாலர் (இந்திய மதிப்பில் 10 லட்சம்) செலவு செய்து தாடி மாற்று அறுவை சிகிச்சை செய்து முகத்தில் தாடியை வரவழைத்திருக்கிறார். இது தொடர்பாக The Cut என்கிற அமெரிக்க பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
முகத்தில் தாடி வளராமல் உன் முகம் குழந்தை போல இருக்கிறது என அவரின் நண்பர்கள் கிண்டல் செய்திருக்கிறார்கள். வேலை செய்யும் இடத்திலும் இதனால் அவர் கிண்டலை சந்தித்ததாக தெரிகிறது. இது அவருக்கு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிவிட்டது. இதனால், அவருக்கு பதவி உயர்வும் கிடைக்கவில்லை. தற்போது தனது தோற்றத்தை மாற்றியபின் தன்னம்பிக்கை அதிகரித்திருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.

