விளையாட்டு

இந்தியா – பிரேசில் அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி.. விழாக்கோலம் ஆகும் கொல்கத்தா…

அக்டோபர் மாத தொடக்கத்தில் கொல்கத்தாவில் நடைபெற உள்ள நட்பு கால்பந்து போட்டியில் உலகப்புகழ் பெற்ற பிரேசில் அணி பங்கேற்க அதிக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆஸ்திரேலியாவில் செப்டம்பர் 25 மற்றும் 29 ஆம் தேதிகளில் நட்பு போட்டிகளை முடித்ததும், மூன்றாவது போட்டியை கொல்கத்தாவின் சால்ட் லேக் மைதானத்தில் நடத்தப் பிரேசில் கால்பந்து கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது.

கால்பந்து உலகக்கோப்பையின் போது கொல்கத்தா தெருக்களில் பிரேசில் அணிக்கு ஆதரவாக ரசிகர்கள் கட்அவுட் வைத்தும், சுவர்களில் ஓவியங்கள் வரைந்தும் தங்களது ஆரவாரமான கொண்டாட்டங்களை வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. பிரேசில் அணியை அழைத்து போட்டி நடத்த வங்கதேசம், கத்தார் மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளும் ஆர்வம் காட்டின; இருப்பினும், தற்போது இந்தியாவுடன் மட்டுமே பேச்சுவார்த்தைகள் சாதகமாக முன்னகர்ந்துள்ளன.

இந்த நட்புப் போட்டி உறுதியானால், கொல்கத்தா நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டு கோலாகலமாகக் கொண்டாட்டங்கள் களைகட்டும். உலகளாவிய முன்னணி கால்பந்து வீரர்களை நேரில் காணவும், பிரேசில் அணியின் ஆட்டத்தைக் களத்தில் கண்டு களிக்கவும் இந்தியக் கால்பந்து ரசிகர்கள் மிகுந்த ஆவலுடனும் பெரு எதிர்பார்ப்புடனும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

விளையாட்டு

பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் என்ன?

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இதில்
விளையாட்டு

பேட்டிங் வரிசையில் ஏற்றம் இறக்கம்: சுந்தர் அளித்த பதில்..!

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரில் இந்தியா தடுமாறி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், 2-வது போட்டியில் மோசமான நிலையில் உள்ளது. முதல் போட்டியில் யாரும்